பார்சல் சாப்பாட்டில் ஆர்டர் செய்தபடி ஊறுகாய் வைக்காததால் ₹35,025 அபராதம்.

விழுப்புரம்: பார்சல் சாப்பாட்டுக்கு ஊறுகாய் தராத உணவகத்திற்கு, ஊறுகாய் விலையுடன் சேர்த்து ₹35,025 அபராதம் விதித்தது நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்.2022ல் ஆரோக்கியசாமி என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பால முருகன் ஹோட்டலில் ஊறுகாயுடன் 25 சாப்பாடு ஆர்டர் செய்து பெற்றுள்ளார்.பார்சலில் ஊறுகாய் இல்லாததால் ஹோட்டலில் சென்று அதற்கான பணத்தை திரும்ப கேட்கையில் நிர்வாகம் மறுக்கவே, வழக்கு தொடர்ந்தார்.மன உளைச்சலுக்கு ₹30,000, வழக்கு செலவுக்கு ₹5000, ஊறுகாய் இழப்பீடாக ₹25 வழங்க உத்தரவு.
Tags : பார்சல் சாப்பாட்டில் ஆர்டர் செய்தபடி ஊறுகாய் வைக்காததால் ₹35,025 அபராதம்.