பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்

by Editor / 02-10-2021 10:55:28am
பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்

உத்தரகண்டில் திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வா் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற் படையைச் சோந்த 10 போ கொண்ட குழு, மலையேற்றத்தில் ஈடுபட்டது. கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட இந்த குழு, நேற்று திரிசூல மலையில் ஏற முற்பட்டனர். அப்போது எதிா்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டது.இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படை உதவியுடன் தேடுதல் பணி நடை பெற்றது. அதில் 5 வீரா்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா். மற்ற 5 வீரா்களும் மலை யேற்ற உதவியாளரும் நேற்று காலை முதல் மாயமாயினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 15 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்

 

Tags :

Share via

More stories