11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகிறது.

by Editor / 25-06-2022 07:48:01pm
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகிறது.

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 27ம் தேதி காலை 10 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Class 11 results will be released on Monday.

Share via