சேலம்-வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை நிகழ்வு- நுழைவுச்சீட்டுள்ளவர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துஅனுமதி
நாளை மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை சேலம் சீலநாயக்கன்பட்டி கேவிபி கார்டன் உள்வளாகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்போடு தேர்தல் பரப்புரை நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் நாலாயிரத்து தொள்ளாயிரத்தி தொன்னுத்தி எட்டு பேர் மட்டுமே கலந்து கொள்வதற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாகவும் கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டுள்ளவர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். அதனால் அனுமதிக்கப்படாத வேறு யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் நிகழ்ச்சியை காண விரும்புபவர்கள் தொலைக்காட்சியின் நேரலையில் கண்டு களித்துக் கொள்ளலாம் என்று தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Tags :



















