ஒதுக்கப்படாத ஆதி திராவிடர், சிறுபான்மையினர் நலத்துறை
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில், ஆதி திராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய முக்கிய துறைகள் தற்போதைக்கு யாருக்கும் ஒதுக்கப்படாமல் காலியாக வைக்கப்பட்டுள்ளன. வரவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இந்த துறைகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆதி திராவிடர் நலத்துறை விசிகவிற்கும், சிறுபான்மையினர் நலத்துறை IUML கட்சிக்கும் ஒதுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Tags :


















