‘அண்ணாத்த’  ஷூட்டிங்:  மேற்கு வங்கம் செல்கிறார் ரஜினி  

by Editor / 13-07-2021 03:49:30pm
‘அண்ணாத்த’  ஷூட்டிங்:  மேற்கு வங்கம் செல்கிறார் ரஜினி  

 

நடிகர் ரஜினிகாந்த் (14 ந்தேதி) மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அண்ணாத்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
நான்கு நாட்கள் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் 4 நாட்கள் நடித்தால், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதனால், அதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன. ‘‘எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன். மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது. முன்னர் போல நற்பணி மன்றமாக மட்டுமே செயல்படும்'’ என நேற்று மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினி அறிவித்திருந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo