ரஷ்யாவில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது.

by Admin / 22-03-2026 02:10:06pm
ரஷ்யாவில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது.

ரஷ்யாவில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த அக்வா டைட்டன் கப்பல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பல்கள் முதலில் சீனாவுக்கு செல்ல வந்தன ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் ஹார் முஸ் ஜல சந்தி போர் சூழல் காரணமாக பாதை மாற்றப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டன. இதேபோன்று 1.1 லட்சம் டன் கச்சா எண்ணெய் இயற்றிய மற்றொரு கப்பல் மங்களூர் துறைமுகத்திற்கு வரவுள்ளது. கப்பல்களைத் தொடர்ந்து மற்றும் ஒரு கப்பல் மார்ச் 24 அல்லது 25ஆம் தேதி வாக்கில் குஜராத்தின் சிக்கா துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது மொத்தம் சுமார் ஏழு கப்பல்கள் இவ்வாறு இந்தியா நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த கப்பல்களின் வருகையால் இந்தியாவில் எரிசக்தி பிரச்சனை இலகுவாக குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via

More stories