ஐந்து தொகுதிகளை ஏற்றுக் கொள்வது குறித்து மாநிலக்குழுக் கூடி விவாதிக்கும் -சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம்

by Admin / 22-03-2026 02:56:09pm
 ஐந்து தொகுதிகளை ஏற்றுக் கொள்வது குறித்து மாநிலக்குழுக் கூடி விவாதிக்கும் -சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம்

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தை குழுவினரிடம் ஐந்து தொகுதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் புதிய கட்சிகள் இணைந்துள்ள சூழலை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர்நேரடியாக கேட்டுக் கொண்டதாகவும் ஐந்து தொகுதிகளை ஏற்றுக் கொள்வது குறித்த முதலமைச்சரின் கோரிக்கையை கட்சியின் மாநிலக்குழுக்கூடி விவாதிக்கும் என்றும் அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தொகுதிகள் எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் இருந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதாகவும் பாஜகவை வீழ்த்துவது முதன்மை இலக்கு என்றும் சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக நிலவி வந்த இழுபறிய தொடர்ந்து ஆறு தொகுதிகளுக்கு மேல் வற்புறுத்த வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆறு தொகுதிகளையாவது இந்த முறையும் பெற வேண்டும் என்று அக்கட்சியின் உடைய மாநில குழு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக இரட்டை இலக்க தொகுதிகளை கோரிவந்த சிபிஎம் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள சூழலை கருத்தில் கொண்டு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளுக்கு உடன்பாடு கண்டுள்ள நிலையில் சிபிஎம் தனது ஆறு தொகுதிகள் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளது.

 

Tags :

Share via