ரஜினிக்கு சிலை செய்து அசத்திய ரசிகர்

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகி வரும் 'ஜெயிலர்' திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 10) திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கெட்டப்பை தத்ரூபமாக மண் சிலையாக வடிவமைத்துள்ளார். இதைப் பார்த்த அனைவரும் அவரது முயற்சியை பாராட்டி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
Tags :