ரொனால்டோ செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்தநிறுவனம்!

by Editor / 16-06-2021 02:23:52pm
ரொனால்டோ செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்தநிறுவனம்!

பத்திரிகையாளர் சந்திப்பின்போது 'தண்ணீர் குடிங்க' என கோகோ கோலா பாட்டிலை ஒதுக்கிவைத்த பிரபல கால்பந்து வீரரின் செயலால், அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது.ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. இத்தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்பாக போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரது மேஜையின் மீது இரண்டு கோகோ கோலா குளிர்பான பாட்டில்கள் இருந்ததை கவனித்த ரொனால்டோ, அவற்றை அகற்றிவிட்டு, தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்தார். கூடவே, 'அகுவா' (போர்ச்சுக்கீசியத்தில் தண்ணீர் என்று பொருள்) எனக்கூறி குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீரை குடிக்குமாறு சைகையில் குறிப்பிட்டார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. கோகோ கோலா குளிர்பானத்தை பிரபல கால்பந்து வீரர் ஒருவர் அகற்றியதால், இது அந்த குளிர்பான நிறுவனத்திற்கு எதிரான விளம்பரமாக உருவெடுத்தது. இதன் எதிரொலியாக, கோகோ கோலா நிறுவனம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,300 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது

 

Tags :

Share via

More stories