மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய கூரிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், "திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கணவாய் பட்டி கிராமத்தில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கு பயிலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் படி கட்டாயப்படுத்தியும் அதனை அவர்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க கூடாது என்று கழிவறை சுத்தம் செய்யும் மாணவர்களிடம் ரூ10 கொடுத்து வந்துள்ளார்.
தலைமை ஆசிரியர் பள்ளிக்கு சரிவர வராமல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பெண்ணை ரூ. 3000 தொகைக்கு வேலைக்கு வைத்து அவர்களையே பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வைக்கிறார்.இதனால், மாணவர்களில் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது.எனவே,பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் இவர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். " என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி துரை ரீதியான நடவடிக்கையை ஒரு வார காலத்திற்குள் எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய கூரிய தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான விசாரணையை தொடங்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
Tags :