கிரிமிலேயர் வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் ஒரு தீர்க்கமான வெற்றி-முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

by Admin / 12-03-2026 10:57:48pm
கிரிமிலேயர் வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் ஒரு தீர்க்கமான வெற்றி-முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான கிரிமிலேயர் வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை பாராட்டியுள்ளார். இத்தீர்ப்பை சமூகநீதி வரலாற்றில் ஒரு தீர்க்கமான வெற்றி மற்றும் முக்கியமான மைல்கள் என்றும் ஒரு விண்ணப்பதாரர் கிரிமிலேயர் பிரிவின்கில் வருகிறாரா என்பதை தீர்மானிக்க அவரது பெற்றோரின் சம்பள வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தெளிவுபடுத்தலை அவர் வரவேற்றுள்ளார் . தகுதியுள்ள பல ஓபிசி விண்ணப்பதாரர்களை இட ஒதுக்கீட்டு பலன்களில் இருந்து விலக்கி வைக்கும் மத்திய அரசின் முந்தைய நிலைப்பாட்டிற்கு தீர்ப்பு ஒரு சரியான பதிலடி எனவும் கொடுமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுத்தகைய காரணங்களால் தகுதி இழந்த ஓபிசி மாணவர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒன்றிய அரசு சரி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

 

Tags :

Share via