by Admin /
03-03-2023
09:09:48pm
திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றதைக் கொண்டாடிய பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று கட்சி முக்கிய தலைவா்களுடன் உரையாற்றினார். இந்த மூன்று வடகிழக்கு மாநில மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவித்த அவர், இந்த மாநிலங்களின் பாஜககட்சியினா்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். “இன்றைய முடிவுகள் நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. இப்போது வடகிழக்கு டெல்லியிலிருந்து வெகு தொலைவில் இல்லை, தில் (இதயத்திலிருந்து)என்று குறிப்பிட்டாா்.
Tags :
Share via