மினி டைடல் பூங்காக்கள் அமைத்திட 92 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

by Staff / 19-05-2023 04:47:36pm
 மினி டைடல் பூங்காக்கள் அமைத்திட  92 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19.05.2023) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், 92 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைத்திட அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo