அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என .அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதிமுக தொண்டர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அவர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.
இதன்பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய ஓபிஎஸ்,
உச்சநீதிமன்றத்தின் மூலமாக காவிரி நீரை முழுவதுமாக பெற்று அரசாணையை பெற்றுத் தந்தது அதிமுக அரசு. காவிரி நீர் பெற்றுத்தந்தது தொடர்பாக எந்த கட்சியும் உரிமை கொண்டாட முடியாது.
அதிமுக பொதுக்குழுதான் சசிகலாவை நீக்கியிருக்கிறது. அவரை மறுபடியும் கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை.அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது.
ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய மத்தியில் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கக்கூடிய பாஜகவுக்குத்தான் உரிமை உள்ளது என்றார்.
Tags :