ஐந்து மாநிலத் தோ்தல் தேதி விபரம்-மே 4 ஆம் தேதி தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 23, வேட்பு மனு பரிசீலனை மார்ச் 24, வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 26, வாக்குப்பதிவு ஏப்ரல் 9ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை மே நாலாம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 249 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக அதாவது ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரண்டு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை மே நாலாம் தேதி தொடங்கி அன்றே முடிவு அறிவிக்கிறது.
கேரளா சட்டமன்ற 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே நாலாம் தேதி தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேச 30 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே நாலாம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதியும் வேட்பு மனு தாக்கல் முடிவு 6 தேதியும் வேட்பு மனு பரிசீலனை ஏற்பு 7 தேதியும் வேட்பு மனுவை திரும்ப பெற ஏப்ரல் 9ஆம் தேதியும் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 தேதியும் வாக்கு எண்ணிக்கை 4 தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது.
Tags :


















