இனி எந்த காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் கடந்த 150 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்த பழைய சட்டங்கள் முடிவுக்கு வருகின்றன. இந்த சட்டங்களில் பல முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக பழைய சட்டங்களில் குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில்தான் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்படும். ஆனால், புதிய சட்டங்கள் மூலம் எந்த காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். இது ஜீரோ எஃப்ஐஆர் என்று சொல்லப்படுகிறது.
Tags :