பள்ளி வேன் மோதி 2 மாணவர்கள் பலி

by Staff / 14-10-2023 02:42:43pm
பள்ளி வேன் மோதி 2 மாணவர்கள் பலி

திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே விக்னேஷ் (20) மற்றும் ஜெகநாதன் (19) ஆகிய இருவரும் நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் இரு சக்கர வாகனத்தில் இன்று காலை கல்லூரிக்குச் சென்றபோது காட்டூர் வளைவில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த விக்னேஷை திருவாரூர் அரசு ருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo