ஆந்திர மாநில விஜயநகரத்தில் அல்லூரி சீதாராம ராஜ் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ஆந்திர மாநில விஜயநகரத்தில் அல்லூரி சீதாராம ராஜ் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 5640 கோடி மதிப்பீட்டில் 2,200 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இவ்விமான நிலையும் முதற்கட்டமாக ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எதிர்காலத்தில் இது 4 கோடி பயணிகள் வரை விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளது இந்த சர்வதேச விமான நிலையம் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் வணிகரீதியான பயன்பாட்டிற்கு வருகிறது. இவ்விமான நிலைய தொடக்க விழாவுடன் நெடுஞ்சாலை ரயில்வே திட்ட வழி திட்டங்களுக்காக 17,900 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் நலத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் திம்சா பழங்குடியின மக்களின் நடன நிகழ்வு நடத்த பெற்றது. விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags :


















