முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடல் நடத்தி மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தும் வருகிறார்.அதன் ஒரு பகுதியாக நாளை (ஜூலை 22) மற்றும் ஜூலை 23 தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
22 ஆம் தேதி காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவையில் 15 வேலம்பாளையத்தில் புதிய மருத்துவமனை கட்டிட திறப்பு விழா, திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கோவில்வழியில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழா மற்றும் பொள்ளாச்சியில் கருணாநிதி சிலை திறந்து வைக்கிறார்.
மேலும், உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முடிவுற்ற திட்டங்களை திறந்து வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். குறிப்பாக, திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.
Tags : Chief Minister M.K. Stalin visits Coimbatore and Tiruppur districts.