மன்னர்கள் கட்டிய கோவில்கள் ஒன்றும் தனியார் சொத்துக்கள் அல்ல,.! பாஜகவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு.!
சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறந்நிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு கோவில் தொடர்பான அனைத்தையும் கேட்டறிந்த அவர், மேலும் தனது ஆலோசனைகளையும் வழங்கினார்.அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அறநிலையத்துறைகளை கலைக்க பாஜக தொடர்ந்த பொதுநல வழக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அறநிலையத்துறை கோயில்கள் தனியார் சொத்துக்கள் அல்ல.
அவை கோவில்கள் அனைத்தும் உலகமே வியக்கும் வகையில் மன்னராட்சி காலத்தில் அவர்களால் கட்டப்பட்டது.அதன் நிலங்கள் அனைத்தும் ஜமீன்தார்கள் செல்வந்தர்களால் தானமாக வழங்கப்பட்டது" எனக் கூறினார்தொடர்ந்து பேசிய அவர், "மக்களாட்சி வந்தபின் அதை அரசு நிர்வகிக்கிறது. இப்படியிருக்கும் நிலையில், அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர், குழப்பத்தை ஏற்படுத்தி தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக பாஜக முன்வைக்கும் வாதமே தனியாருக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்வது. குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதை விட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்" எனக் கூறினார்.
Tags :