கொரோனா விழிப்புணர்வுக்கு திருவிளையாடல் பாணி 

by Editor / 09-07-2021 05:49:38pm
கொரோனா விழிப்புணர்வுக்கு திருவிளையாடல் பாணி 



 நாட்டின் கொரோனா தொற்றுப் பரவல் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சக உயர் அலுலவர்களின் ஆய்வுக் கூட்டம் நடந்தது.இதில் சுகாதாரத்துறை இணைச்செயலர் அகர்வால்,’நாட்டில் இரண்டாம் அலை இன்னும் முழுமையாக ஓயவில்லை.
 எனவே, மக்கள் அலட்சியப் போக்கை கடைபிடிக்கக் கூடாது’என எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஒன்றிய, மாநில அரசுகள் மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, பொது சுகாதாரத்துறை விழிப்புணர்வு படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், திருவிளையாடல் திரைப்படத்தில் சிவனாக சிவாஜியும், தருமியாக நாகேஷும் பேசிக் கொள்ளும் எதிர் - எதிர் விவாதங்கள், கரோனா விழிப்புணர்வு உரையாடலாக மாற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories