அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்புவீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம். 

by Editor / 13-04-2024 10:17:15am
அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்புவீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம். 

 ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் தொகுதிக்குட்பட்ட முன்னிலைக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ளது பண்ணைப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்..
இந்நிலையில்  பண்ணைப்பட்டி ஊரில் உள்ள பள்ளி கட்டமைப்பை மேம்படுத்துதல்,  குடிநீர் பிரச்சனை, மயான வசதி, சாலை வசதி, பேருந்து வசதி, தூய்மை பணியாளர்களை பணி அமைத்தல்,  விவசாயக்களம் மற்றும் கால்நடை மருத்துவ வசதி, கிராம நூலகம் விளையாட்டு மைதானம்,  மற்றும் கிராம பகுதியில் சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கழிவுகளை கொட்டுவதால் நீர்நிலைகள் விவசாய நிலங்கள் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ணைப்பட்டி   ஊர் பொதுமக்களின் சார்பாக வரும் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊர் மக்கள் முடிவு செய்து ஊருக்குள் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை வருகின்றனர் 

தேர்தலை புறக்கணிக்க போவதாக ஊரின் மத்தியில் பொதுமக்களின் சார்பில் அறிவிப்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதை கேள்விப்பட்ட திமுகவினர் நேற்று இரவு ஊருக்குள் புகுந்து பதாகைகளை எடுக்க சொல்லியும் கருப்பு கொடி போராட்டத்தை கைவிடக் கோரியும் தங்களை வலியுறுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Tags : அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்புவீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம். 

Share via