கிணற்றில் விழுந்த மூதாட்டி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்பு

by Staff / 27-02-2023 03:24:40pm
கிணற்றில் விழுந்த மூதாட்டி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்பு

தூத்துக்குடி மேல அலங்கார தட்டு பகுதி பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி பார்வதி என்பவர் வீட்டில் தனியாக இருந்து உள்ளார் இந்நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார் இதில் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்த பார்வதி கிணற்றில் இருந்த பைப்பை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டில்ளார் இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து பார்வதியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.ஆனால் மூதாட்டி யை காப்பாற்ற முடியாதை தொடர்ந்து தூத்துக்குடி நகர தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நகர தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டி பார்வதியை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து மூதாட்டியை உயிருடன் மீட்டனர் இதைதொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை வீரர்களை வெகுவாக பாராட்டினர்.

 

Tags :

Share via