குற்றால அருவிகளில் நீர்வரத்து குறையத்தொடங்கியது.

by Editor / 11-01-2022 09:58:15am
குற்றால அருவிகளில் நீர்வரத்து குறையத்தொடங்கியது.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக மழை இல்லாத நிலை நீடித்து வருகிறது, இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளுக்கும் நீர்வரத்து வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. மேலும்அருவிகளின் நகரம் எனப் போற்றப்படும் குற்றால அருவிகளில் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி குற்றாலம் மெயின் அருவி பகுதியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் அதிக அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் சுத்தமாக தண்ணீர் இல்லாததால்  பெண் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து சென்ற வண்ணம் உள்ளனர்.  மேலும் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி உள்ளதால் அங்கு பெண்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான பெண்கள் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். ஐந்தருவி பழைய குற்றால அருவிகளில் ஓரளவு தண்ணீர் கொட்டுவதால் பெண்கள் மகிழ்ச்சியுடன் அந்த பகுதிக்கு குளிக்க சென்று வருகின்றனர், குற்றாலம் மெயினருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் ஓரளவு தண்ணீர் கொண்டுவருவது ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது குறிப்பிடத்தக்கது.

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறையத்தொடங்கியது.
 

Tags :

Share via