மதுரை - கோவை பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையம் அருகே ரயில் தடம்புரண்டது.

by Editor / 13-09-2023 10:33:02pm
மதுரை - கோவை பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையம் அருகே ரயில் தடம்புரண்டது.

மதுரை - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் இன்று இரவு 8 .15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த பின்னர் பயணிகளை முழுவதுமாக இறக்கிவிட்டு ரயில் பெட்டிகளுடன் போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்க  சென்றபோது  கடைசி பெட்டி திடீரென தடம் புரண்டது. தடம் புரண்ட ரயில் பெட்டியை கழற்றி விட்டு மற்ற காலி பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டு சென்றது.இந்த ரயிலானது கண்ணூர் - பெங்களூரு இணைப்பு ரயில் என்பதால் தற்பொழுது அந்த ஒரு ரயில் பெட்டியை தவிர மற்ற பெட்டிகளுடன் ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளுடன் புறப்பட உள்ளது.தற்போது ரயில் பெட்டி தடம் புரண்ட பகுதி என்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் தீ விபத்து ஏற்பட்ட பகுதி என்பது குறிப்பிடதக்கது.

 

Tags :

Share via

More stories