இன்று அதிமுக பொதுக் குழுக் கூட்டம்

by Admin / 26-12-2023 09:23:00am
இன்று அதிமுக பொதுக் குழுக் கூட்டம்

இன்று அதிமுக பொது குழு கூட்டம் ,சென்னை வானகரத்தில்  ஸ்ரீவாரி கல்யாண  மண்டபத்தில் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளரான பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாரோடு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். இல்லை, கூட்டணி இன்றி தனித்து நிற்கலாமா ? மழை வெள்ளத்தில் தமிழ்நாடு அரசு செய்த செயல்பாடுகள் ,பொது மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகை குறித்த பல்வேறு பிரச்சனைகளை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த தேர்தல் வரை பாரதிய ஜனதாவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி தனித்து நிற்கின்ற நிலையில், தொண்டர்களினுடைய கருத்துப்படி தனித்தே போட்டியிடலாமா ?என்பது குறித்து கூட ஆலோசனை மேற்கொள்ளலாம் என்று சொல்லப்படுகின்றது. 38 மாவட்ட செயலாளர்களும் செயற்குழு உறுப்பினர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜ்யசபா உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்து கொண்டிருக்கின்ற நிலை,.. வானகரம்  அரசியல் திருவிழா போன்று காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

இன்று அதிமுக பொதுக் குழுக் கூட்டம்
 

Tags :

Share via