2,29,866 பேரை வாரிசுருட்டிய சுனாமிநினைவுதினம்.

by Editor / 26-12-2023 09:18:58am
2,29,866 பேரை வாரிசுருட்டிய சுனாமிநினைவுதினம்.

தமிழகத்தில் இன்று சுனாமி தாக்கியதின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் பொதுமக்கள், சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி பூக்களை தூவி உறவினர்கள் நினைவஞ்சலி செலுத்துகின்றனர். இந்தியாவில்  மட்டும் இல்லாமல், இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2,29,866 பேர் இந்த சுனாமியால் உயிரிழந்தனர். 43,786 பேர் காணாமல் போயினர். இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்த நாடுகளில் 19ஆம் ஆண்டு நினைவு தின  துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

 

Tags : 2,29,866 பேரை வாரிசுருட்டிய சுனாமிநினைவுதினம்.

Share via

More stories

Logo