இலவச லேப் டாப் எப்போது வழங்குவீர்கள்? - இ.பி.எஸ்.

by Staff / 26-05-2024 03:23:46pm
இலவச லேப் டாப் எப்போது வழங்குவீர்கள்? - இ.பி.எஸ்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் அ.தி.மு.க ஆட்சியில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. அதை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தியுள்ளது. சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில் இந்த ஆண்டுக்கான லேப்டாப்கால் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை என்று  அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது தி.மு.க. அரசு நிறைவேற்றுமா? இல்லை, அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்று  நொண்டிச்சாக்கு கூறுவீர்களா ?என்று  கேள்வி  எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via