விசிக சார்பில் எண்ணூர் கத்திவாக்கத்தில் ஆர்ப்பாட்டம்

by Staff / 09-01-2024 02:03:50pm
விசிக சார்பில் எண்ணூர் கத்திவாக்கத்தில் ஆர்ப்பாட்டம்

கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக இழுத்து மூடக்கோரி விசிக சார்பில் எண்ணூர் கத்திவாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், 'சென்னை எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் குழாய் வெடித்து கந்தக அமோனியா நெடிப்புகையால் பல்வேறு நோய்களுக்கும், மரணங்களுக்கும் காரணமாய் கருதப்படும் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக இழுத்து மூடக்கோரி இன்று மாலை 3 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கத்திவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்கவும்' என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories