சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி
பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீது அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார். சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் விசாரிக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. இந்நிலையில் அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
Tags :