ஜெயலலிதா பெயரை நிராகரித்த ஜனாதிபதி

by Staff / 23-03-2024 04:28:17pm
ஜெயலலிதா பெயரை நிராகரித்த ஜனாதிபதி

நாகை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கும் பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்துள்ளார். மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டுமென அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரிடம் தீர்மானம் கிடப்பில் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆளுநர் அனுப்பிய பரிந்துரையை நிராகரிப்பதாக அரசுக்கு குடியரசுத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

Tags :

Share via