தமிழக அரசு ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து உத்தரவு.
தமிழக அரசு 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாகதேவி சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை சரக டி. ஐ .ஜி யாக இருந்த சரவணன் உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். உளவுத்துறையின் உள் பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி யாக பி.சி. கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிறப்பு பிரிவு சி.ஐ.டி டி.எஸ்.பி.யாக சிலம்பரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் மயில்வாகனன், மதன், சண்முகம், மாதவன், பகாரியா ஜெபாஸ் கல்யாண் ஆகிய ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
Tags :


















