அமெரிக்காவும் சீனாவும் நெருக்கமாகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சீனப்பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான இணக்கமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின் பிங்குடனான பேச்சுவார்த்தை சுமுகமான நிலையில் நடப்பதால் ஒரு இணக்கமான போக்கு உருவாகி உள்ளது. உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான இரு தரப்பு உறவு ஏற்படுவதற்கான சூழல். இந்த சந்திப்பு ,கடந்த கால கடுமையான வர்த்தக போர்கள் மற்றும் பரஸ்பர வரிவிதிப்புகளுக்கு பிறகு தற்பொழுது ஒரு புதிய தற்காலிக அமைதி நிலையை நோக்கி நகர்கிறது. இரு நாடுகளுக்கு இடையில் ஒரு நெருக்கம் ஏற்பட்டிருந்தாலும் அதை எவ்வளவு தூரத்திற்கு நீடிக்கும் என்று சொல்வதற்கு இல்லை. இரு நாடுகளும் தங்கள் சொந்த பொருளாதாரம் நலன்களுக்காகவும் உலகளாவிய மந்தநிலையை தவிர்க்கவும் இந்த உடன்பாட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மே 13 முதல் 15 வரை சீனாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளதினால் இரு வல்லரசு நாடுகளுக்கு இடையில் இந்த சந்திப்பு ஒரு புதிய உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது சீன அதிபர் அமெரிக்காவுடன் மோதலை தவிர்த்து எதிரிகளாக இல்லாமல் கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என்று பொது வழியில் வேண்டுகோள் விடுத்துள்ளார் 2025ல் இரு நாடுகளும் மாறி மாறி விதித்துக்கொண்ட கடுமையான வரிகளுக்குப் பிறகு தற்பொழுது இந்த பேச்சு வார்த்தையின் மூலம் வர்த்தக பதற்றங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கடுமையான போட்டியிட்டு வருகின்றன. சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை நகல எடுப்பதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது நவீன தொழில்நுட்பங்களுக்கு தேவையான உயர்தர கணினி சிக்கலை அமெரிக்காவிடமிருந்து பெற சீனா விரும்புகிறது அதற்கு பதிலாக தனது கட்டுப்பாட்டில் உள்ள 90 சதவீத அரிய வகை கனிமங்களை அமெரிக்காவிற்கு வழங்கவும் இந்த பேச்சுவார்த்தை வாய்ப்பாக அமையும். இந்த இரு நாடுகளும் இணக்கமான போக்கில் செயல்பட்டால் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு நன்மைகள் பொருளாதார முரண்பாடுகள் தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கை உருவாகிறது.
Tags :


















