திருடுவதற்கு எந்தப் பொருளும் கிடைக்காததால் கொட்டகையை கொளுத்திய மர்ம ஆசாமிகள்

by Staff / 04-05-2022 12:48:02pm
திருடுவதற்கு எந்தப் பொருளும் கிடைக்காததால் கொட்டகையை கொளுத்திய மர்ம ஆசாமிகள்

 செங்கல்பட்டு மாவட்டம் அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் மலை மீது சிவன் கோயிலில் மக்கள் அதிக அளவில் வந்து வழிபாடு செய்து செல்வது வழக்கம்.


இதனை கண்காணித்த மர்ம ஆசாமிகள் இரவு நேரத்தில் கோவில் பொருட்களை கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளனர். கோவிலில் உள்ள சிசிடிவி ஒயர்களை வெட்டி திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கோவில் எந்த வித பொருட்கள் கிடைக்காததால் கோபமடைந்த மர்ம ஆசாமிகள் அருகிலுள்ள, கொட்டகைக்கு தீ வைத்து சென்றனர்.

கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் உள்ள பொருள்கள் தீயில் கருகியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் சேர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

Tags :

Share via