மாமன்னர் பூலித்தேவரின் 310-வது ஜெயந்தி விழா கொண்டாட்டம் - 1,032 போலீசார் பாதுகாப்பு.

by Staff / 01-09-2025 09:40:00am
மாமன்னர் பூலித்தேவரின் 310-வது ஜெயந்தி விழா கொண்டாட்டம் - 1,032 போலீசார் பாதுகாப்பு.

மாமன்னர் பூலித்தேவரின் 310-வது ஜெயந்தி விழா இன்றைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பூலித்தேவரின் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அவர் வாழ்ந்த பூமியான தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவல் பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசு சார்பிலும், பூலித்தேவரின் வாரிசுகள் சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சார்பிலும் இன்றைய தினம் மரியாதை செலுத்தப்பட உள்ள நிலையில், ஏராளமான பொதுமக்களும் மரியாதை செலுத்த வருவார்கள் என்பதால் நெல்கட்டும்செவல் சுற்று வட்டார பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பி.க்கள், 37 இன்ஸ்பெக்டர்கள், 72 சப்- இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1,032 போலீசார் பூலித்தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, தென் மண்டலத்தில் உள்ள தேனி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பூலித்தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் பொது மக்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : மாமன்னர் பூலித்தேவரின் 310-வது ஜெயந்தி விழா கொண்டாட்டம் - 1,032 போலீசார் பாதுகாப்பு.

Share via

More stories