ஜனவரி 27 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்.
ஜனவரி 27 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் சுமார் 8 லட்சம் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு ,வாரத்தில் 5 நாட்கள் வேலை ,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக காசோலை பரிவர்த்தனை, பணம் டெபாசிட் செய்தல் மற்றும் எடுத்தல் போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் ,ஏ.டி.எம் மற்றும் ஆன்லைன் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வங்கி தொடர்பான அவசர தேவைகளை முன்னரே திட்டமிட்டு கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Tags :


















