6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்.

by Editor / 18-11-2021 12:23:18pm
6 மாவட்டங்களுக்கு  அதி கனமழைக்கான எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டைகடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு   இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புதுச்சேரியிலிருந்து 300 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை இன்று இரவு நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via