சங்கரன்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா   யானை பிடிமண் எடுக்கும் நிகழ்வு 

by Editor / 30-04-2025 06:50:36pm
சங்கரன்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா   யானை பிடிமண் எடுக்கும் நிகழ்வு 

 சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத அருள்தரும் கோமதி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில்  சித்திரை மாதம் நடைபெறும் சித்திரைத் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமா்சையாக நடைபெறுகின்றது.  10 நாள்கள் நடைபெறும்  இத்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இதனையொட்டி சங்கரன்கோவில் அருகே உள்ள பெருக்கோட்டூரில் கோமதியானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி (அங்குராா்ப்பணம்) இன்று  நடைபெற்றது.  தொடா்ந்து திருக்கோவிலிலில் இருந்து கோமதியானை முன்செல்ல சுவாமி சந்திரசேகரா்  கோமளாதேவிஅம்பாள் உக்கிரபாண்டியராஜா ஆகியோா் சப்பரத்தில் எழுந்தருளி 6 கி.மீ.தொலைவில் பெருங்கோட்டூரை வந்தடைந்தனர். அங்கு திருக்கோட்டி அய்யனார் கோவில் முன்பு  கோமதியானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Tags : சங்கரன்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா   யானை பிடிமண் எடுக்கும் நிகழ்வு 

Share via