இணைபிரியாமலேயே இறைவனடி சேர்ந்த தம்பதிகள்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்பகுதியை சேர்ந்தவர்கள் குணசீலன் (74), தமிழரசி ( 68) தம்பதி. இவர்களுக்குத் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் குணசீலனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதின் காரணமாகக் குணசீலன் உயிரிழந்தார்.அவரின் இறப்புச் செய்தியைக் கேட்ட மனைவி தமிழரசி சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து தம்பதிகள் இருவரது உடலும் ஒன்றாகவே அடக்கம் செய்யப்பட்டது.ஒரே நாளில் கணவனும்,மனைவியும் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் இணைபிரியாத தம்பதியாக வாழ்ந்தவர்கள் இணைபிரியாமலேயே இறைவனடி சேர்ந்தது பற்றி பரப்பரப்பாக பேசப்பட்டுவருகிறது.
Tags : Couples united under God without mutual love