குற்றங்கள் குறைவதற்கு கஞ்சா, பாங்குவை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்-பாஜக எம்.எல்.ஏ ஆலோசனை
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மஸ்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, மதுபானங்களை ஒழித்து விட்டு கஞ்சா விநியோகத்தை ஊக்குவிக்க வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அவர், "சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் மது குடிப்பதே இதற்குக் காரணம். மது குடிப்பதால்தான் இப்படியான குற்றங்களைச் செய்ய மனிதர்களைத் தூண்டுகிறது. ஆனால் கஞ்சா, பாங்கு பயன்படுத்துபவர்களுக்கு இத்தகைய எண்ணம் ஏற்படுவதில்லை. எனவே மதுபானங்களை ஒழித்துவிட்டு, கஞ்சா, பாங்குவை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். கஞ்சாவை அரசே விற்பனை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Tags : Use of ganja, pangu should be encouraged to reduce crime-BJP MLA suggests