மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் பின்னடைவு
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரது தனிப்பட்ட செயலாளர் வைபவ் குமார் சமீபத்தில் தனது பணிகளில் இருந்து நீக்கப்பட்டார். அவரது பணி நியமனத்தில் விதிமுறை மீறல் நடந்துள்ளதாக விஜிலென்ஸ் துறை தெரிவித்துள்ளது. இந்த நீக்கம் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :