by Staff /
03-07-2023
12:12:34pm
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி போலீசார் ட்ரோனை தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை ட்ரோன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் ட்ரோன் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :
Share via