பிளேஸ்டோரில் 221 லோன் ஆப்ஸ் நீக்கம்
சட்டவிரோதமாக ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 221 போலி கடன் செயலிகள் நீக்கம். கடன் பெறும் வாடிக்கையாளர் குறித்த காலத்துக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக எடிட் செய்து அவரின் உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோத கடன் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதினர். கடந்த நான்கு மாதங்களில் 221 கடன் செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
Tags :