ஏரல் மணல் கொள்ளையில் திமுக நகரச் செயலாளர்தொடர்பு கம்யூ.ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டு.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கரும்பன் பேசியபோது ஏரல் பகுதியில் அதிக அளவு செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளை மற்றும் புதிய வீடு கட்டுவதற்கு அனுமதி இல்லாமல் ஏரல் பகுதியைச் சேர்ந்த திமுக நகரச் செயலாளர் ராயப்பன் என்பவர் அதிகாரத் துணையுடன் மணல்களை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார் .இதை ஏரல் காவல்துறை மற்றும் ஏரல் வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி பேசியதாக கூறப்படுகிறது.அப்போது அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த ஏரல் திமுக நகரச் செயலாளர் ராயப்பன் என் பெயரைச் சொல்லி எப்படி மேடையில் பேசலாம் என்று அந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு கம்யூனிஸ்ட் பொறுப்பாளர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags : ஏரல் மணல் கொள்ளையில் திமுக நகரச் செயலாளர்தொடர்பு கம்யூ.ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டு.



















