by Staff /
13-07-2023
01:42:00pm
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டெல்லி சென்றுள்ள அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை இன்று சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தின் அரசியல் நிலவரம் ஆளுநர் - முதல்வர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜக மேற்கொண்டிருக்கும் பணிகள் தொடர்பாக என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
Tags :
Share via