பெண்களுக்கான இலவச பயண டிக்கெட்டைஆண்களுக்கு கொடுத்த நடத்துநர்
சென்னையில் உள்ள நடத்துனர் ஒருவர் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இலவச விக்கெட்டை ஆண்கள் கொடுத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அதிலும் பெண்களுக்கு இலவச டிக்கெட் என்ற விபரம் தெரியாத வடமாநில இளைஞர்களுக்கு அவர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து புகார் எழுந்ததை அடுத்து அந்த நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கான இலவச டிக்கெட்டை ஆண்கள் வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றம் என்றும் அந்த டிக்கெட்டை கொடுக்கும் நடத்துனர் மற்றும் அந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகள் ஆகிய இருவருமே தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் தற்போது போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :