76 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த அண்ணன், தங்கை

by Staff / 09-08-2023 04:33:48pm
76 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த அண்ணன், தங்கை

இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த சகோதர, சகோதரிகள் 76 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் அவர்கள் பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பில் எதிர்பாராத விதமாக சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். பாகிஸ்தானிய யூடியூபர் நசீர் தில்லான் வெளியிட்ட வீடியோவில், பாகிஸ்தானிய பெண் சகினா பீ, தனது மூத்த சகோதரர் குர்மெயில் சிங் கிரேவால் இந்தியாவின் பஞ்சாபில் இருப்பதாகக் கூறியிருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த குர்மெயில் கர்தார்பூர் காரிடார் வழியாக பாகிஸ்தானுக்குச் சென்று தனது சகோதரியைச் சந்தித்தார்.

 

Tags :

Share via

More stories