இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பயங்கர சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மர்ரிபாலம் பிரகாஷ் நகரில் திருமணமான பெண் ஒருவர் நேற்று தனது இரண்டு குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த 3 பேர் காவலாளியின் மனைவி சந்தியா, குழந்தைகள் அலேக்யா மற்றும் கவுதம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியினர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
Tags :