குழந்தை மரணம்? பிரேத பரிசோதனை அறிக்கையில் திருப்பம்

சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த தேவநாதனின் 8 மாத பெண் குழந்தை சளித்தொல்லையால் அவதியடைந்துள்ளது. இதனால் பெற்றோர் தைலத்துடன் கற்பூரம் கலந்து தேய்த்ததால் மூச்சுத்திணறல் ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஜூலை 16) இறந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, குழந்தை பிறக்கும் போதே கல்லீரல், சிறுநீரக பிரச்னை இருந்ததாகவும், அதுவே உயிரிழப்புக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags :